தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட சம்மேளன 2022 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவுக்கூட்டம் !
நூருல் ஹுதா உமர்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கழக அம்பாறை மாவட்ட சம்மேளனம் நடாத்திய 2022 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவுக்கூட்டம் அம்பாறையில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஊடகவியலாளர் எம்.எம்.றுக்ஸான் தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக பதவி வழியில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியும், பொருளாளராக சாய்ந்தமருது இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஊடகவியலாளர் ஹிஸாம் ஏ பாபாவும், அமைப்பாளராக அம்பாறையை சேர்ந்த கே.எச்.எம்.டி.மதுசங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த இளைஞர் சேவை அதிகாரிகள், பிரதேச செயலக இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதிகளின் எனப்பலரும் கலந்துகொண்ட இந்த நிர்வாகத்தெரிவுக்கூட்டத்தில் உப தலைவர்களாக சம்மாந்துறையை சேர்ந்த டீ .எம். தஹ்ஸீன், கல்முனையை சேர்ந்த கே. திலக்சன் ஆகியோரும், உப செயலாளர்களாக அட்டாளைச்சேனையை சேர்ந்த ஏ.சி.எம். ரிப்கான், அம்பாறையை சேர்ந்த ஏ.எம். நிமஷ துலானி ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டதுடன் மேலும் பல கிளைப்பொறுப்பாளர்களும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டனர்.
பல்லினங்களும் வாழும் அம்பாறை மாவட்டத்தில் இளைஞர்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்தி தேசத்தை முன்னேற்ற எடுத்திருக்கும் இப்பணியில் இவ்வாண்டு தலைவராகவும், பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்கள் பிராந்திய ஊடக நிறுவனங்களின் முக்கிய பதவி வகிப்பவர்கள் என்பதுடன் அல்- மீஸான் பௌண்டஸனின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகவும், பல்வேறு சமூக அமைப்புக்களில் முக்கிய பதவிவகித்து வருகின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments