புத்தளம், கரைத்தீவின் "முதல் சட்டத்தரணியாக" M.M.M சதாம் (நளீமி) உயர் நீதிமன்றில் சத்தியப்பிரமாணம்.
புத்தளம், கரைத்தீவைச் சேர்ந்த மஹ்மூத் மரைக்கார், சித்தி சாஹிமா ஆகியோரின் புதல்வரான முஹம்மத் சதாம் (நளீமி) 09.08.2022 அன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மீயுயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில், உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
1913 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டைக் கடந்ததும், அதிகஷ்டப் பிரதேச பாடசாலையுமான பு/கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும், ஜாமிஆ நளீமியா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் என்பவற்றின் பட்டதாரியுமான இவர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தனது சட்டமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்து, இலங்கை சட்டக்கல்லூரியிலும் சட்டக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து சட்டத்தரணியாக தெரிவானார்.
நீண்ட வரலாற்றைக் கொண்ட பல ஊர்களை உள்ளடக்கிய "பொன்பரப்பி" பிரதேசத்தின் இவரே "முதல் சட்டத்தரணி" என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி அடைவானது சாதிக்கத்துடிக்கும் கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கு வாய்ப்புக்கள் ஓர் தடையல்ல! என்பதற்கு இவர் ஓர் முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.
இதன் மூலம் தனது பெற்றோர், பாடசாலை மற்றும் ஊருக்கு பெருமை சேர்த்த இவரை எமது மதுரங்குளி மீடியா நிர்வாகம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
No comments