Breaking News

கல்பிட்டி பிரதேச சபை ஆளுமை மிக்க தலைமையத்துவத்தை இழந்துள்ளது - பி.ச.உ. கே.எம்.எம்.பைஸர் மரிக்கார்.

முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எனது நண்பர் முஹம்மத் அக்மல் அவர்களின் திடீர் மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன் என கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.


அக்மலின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;


கடந்த 04 வருடங்களுக்கு மேலாக நானும் அவரும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் என்ற ரீதியில் அன்னாருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளேன். அந்நாட்களை மீட்டும் போது என் மனம் குமிரிக்குமிரி அழுகின்றது.


அவர் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர். சமூக சேவைகளிலும் மிகவும் அக்கறையுடன் செயற்படக்கூடியவர் ஏழைகளுக்கும் உதவும் நல்லெண்ணம் கொண்டவர்.


இந்நிலையில் அவரது திடீர் மறைவானது எமது கல்பிட்டி பிரதேச சபை ஒரு ஆளுமை மிக்க தலைமையத்துவத்தை இழந்துள்ளது.


இவரின் மறைவு  றமழான் மாதத்தின் இறுதி நாளில் புனிதமான தினத்தில் அவரை இறைவன் தன்னகத்தே அழைத்துக்கொண்டான்.


அன்னாரது மறைவினால் துயறுற்றிக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.


வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்.


உங்களுடன் துயரில்...

கே.எம்.எம். பைஸர் மரிக்கார்

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.




No comments