JobVibe.lk - Sri Lanka Job Portal

மருதமுனை அல் ஹம்ராவின் வித்யாரம்ப விழா

நூருல் ஹுதா உமர் 

கல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/அல்- ஹம்றா வித்தியாலய தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்கும் 2022 ஆம் ஆண்டின் வித்தியாரம்ப நிகழ்வு மிகவும் சிறப்பாக பாடசாலை அதிபர் ஐ. உபைத்துல்லாஹ்வின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று (05) நடைபெற்றது.


பாடசாலை நிறைவேற்றுக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிராந்திய தொற்றாநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ. சி. பஸால், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியலாளர் எம்.எஸ்.எம். பஸீல், உள்ளுராட்சி மன்றங்களின் செயற்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம். வலீத், பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் பீ. எம்.எம். நஸ்ருதீன் ஆகியோர் கலந்து கொண்டு வித்தியாரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 


இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதிஅதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال