கனமூலை சேகுஅலாவுதீன் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை!
புனித நோன்புப் பெருநாள் தொழுகை கனமூலை பெரிய பள்ளியின் ஏற்பாட்டில் கனமூலை சேகுஅலாவுதீன் பொது விளையாட்டு மைதானத்தில் திறந்த வெளியில் செவ்வாய்க்கிழமை (3) காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
இதன் போது பெரிய பள்ளியின் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் அன்பாஸ் (ஹிழ்ரி) தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .
இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
No comments