Breaking News

2015-2019 நல்லாட்சியின் பொருளாதார கொலையாளி பிரதமர் ஆனது எப்படி ? - ஜே.வி.பி தலைவர் அனுரகுமார உரை

எமது கொள்கைகளை விட ரணில் ராஜபக்ஷ பிணைப்பு பலமானது


இந்த நாட்டின் முற்போக்கு பொருளாதாரம் அரசியல் கொள்கைகள் எதனையும் விட ரணில் ராஜபக்ஷ கூட்டு பலமானது என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


அரசியல் எதிர் முகாம்களில் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டி பதவிக்கு வரும் இந்த இரண்டு அரசியல் கூட்டங்களும் சூழ்நிலைக்கு ஏற்ப மீண்டும் கூட்டுச் சேர்ந்து ஆட்சிகளை அமைத்துக் கொள்கின்றன.


நல்லாட்சி காலத்தில்  பொருளாதாரத்தை சீர்குலைத்த கொலைகாரன் என ரணிலை வர்ணித்த அரசாங்கம் இன்று சீர்குலைந்த பொருளாதாரத்தை சீர் தூக்க அதே ரணில் விக்ரமசிங்க வை பிரதமராக நியமித்துள்ளது.


மக்கள் வரம் இல்லாத ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில்வாக்களிக்கும் பணத்துக்கு விலை போகின்றவர்களை நாட்டு மக்கள் அடையாளம் காண வேண்டும் எனவும் அவர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




No comments