Breaking News

04 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று, (14) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இவ்வாறு நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார்.


கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (14) பிற்பகல், ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.


01. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்            - வெளிநாட்டலுவல்கள்.


02. திரு.தினேஷ் குணவர்தன             - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.

 

03. திரு. பிரசன்ன ரணதுங்க             -  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு.


04. திரு. காஞ்சன விஜேசேகர            -  மின்சாரம் மற்றும் வலுசக்தி


ஜனாதிபதி ஊடகப் பிரிவு








No comments