நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற பிராயாவிடையும், பரிசளிப்பு விழாவும்.
புத்தளம் தெற்கு கோட்டற்திற்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 மாணவர்களின் "பிரியாவிடையும், பரிசளிப்பு நிகழ்வும்" நேற்று (30) பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், தொழிலதிபருமான கே.எம்.எம். பைஸர் மரிக்கார் மற்றும் அதே பிரதேச சபை உறுப்பினரான என்.எம்.ஹிஸாமும் கலந்து கொண்டார்கள். கல்விப்புல அதிகாரியான புத்தளம் தெற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி சுஜீவிகா மற்றும் கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், நினைவுச் சின்னங்களும், பரிசில்கள் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வை மெருகூட்டுவதற்காக மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும் அரகேரியது விஷேட அம்சமாகும்.
இந்நிகழ்வு மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் ட்ரீம் செண்டரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
படஉதவி - ஏ.ஆர். பரீத்
No comments