JobVibe.lk - Sri Lanka Job Portal

சீன தூதரகத்தினால் கொழும்பு முஸ்லிங்களுக்கு நோன்பை முன்னிட்டு உலருணவுகள் வழங்கி வைப்பு !

நூருல் ஹுதா உமர் 

சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாகவும் எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டும் கொழும்பில் வாழும் முஸ்லிங்களுக்கு சீன தூதரகத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 


முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பிரதிபா மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேவையுடைய மக்களுக்கு உணவுப்பொருட்களை கையளித்தார். இந்நிகழ்வில் உலமாக்கள், முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் முக்கியஸ்தரும் ஜனாதிபதி செயலணி உறுப்பினருமான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ. ஹலீலுர் ரஹ்மான், சீன தூதரக அதிகாரிகள், முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال