மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் “ஊரிலிருந்து தொடங்குவோம்” புத்தளத்தில்...
மக்கள் விடுதலை முன்னணி (JVP) யினால் மக்களுக்கு நாட்டு நிலைமையைத் தெளிவூட்டி தீர்வுகளையும் முன்மொழிவுகளையும் எடுத்துக்கொண்டு மக்களை சந்திக்கும் “ஊரிலிருந்து தொடங்குவோம்” வேலைத்திட்டம் 2021.11.27 ஆம் திகதி சனிக்கிழமை புத்தளத்தில் நடைபெற்றது.
இம்மக்கள் சந்திப்புக்கு ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தி (NPP) யின் தலைவர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, ஜேவிபி புத்தளம் மாவட்ட செயலாளர் கயான் ஜானக உட்பட JVP / NPP அமைப்புக்களின் முன்னோடிகள், தொண்டர்கள் மற்றும் ஜேவிபி புத்தளம் தொகுதி செயற்குழுவினரும் இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது புத்தளம் மக்கள் கூறிய கருத்துக்களை ஒன்றுதிரட்டி ஒற்றை வரியில் பின்வருமாறு குறிப்பிடலாம்,
“ராஜபக்ஷகளின் ஆட்சியின் மீது வெறுப்படைந்துள்ளோம். சஜித் ரனில் கட்சியையும் நம்பக்கூடியதாக இல்லை. JVP / NPP யின் கருத்துக்களை பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். நீங்கள் (JVP / NPP) நமது நாடு விழுந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்டெடுப்பீர்கள் என்று நம்பிக்கை இருக்கின்றது”.
ஒளிப்படங்கள் - JVP Puttalam Media Unit
No comments