புத்தளம்: முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைப்பு
புத்தளம் பாலாவி முல்லை ஸ்கீம் கிரமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முல்லை ஸ்கீம் Social Aid சமூக அமைப்பின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
Social Aid அமைப்பின் தலைவர் அப்துல் ரஹீம் ஜபருல்லாஹ் தலைமையில் இந்த நிகழ்வு இன்று மாலை முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினரும், Social Aid சமூக அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அண்மையில் பெய்த கடும் மழையினால் பாலாவி முல்லை ஸ்கீம் கிராமத்தின் ஒரு தாழ் நிலப்பகுதி வெள்ளத்தினால் மூழ்கியது.
இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதேசத்தில் உள்ள தனவந்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் வாழும் முல்லை ஸ்கீம் சகோதரர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெறப்பட்ட 3 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பன 80 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆர். ரஸ்மின்
No comments