Breaking News

மாவனல்லை பொலீஸ் நிலையம் ஆசிரியர்கள் பெற்றோர்களால் சுற்றி வளைப்பு

மாவனல்ல மெடேரிகம மகா வித்தியால ய அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களை பாடசாலை வளவில் நுழைந்து எச்சரிக்கை விடுத்துள்ள மாவனல்லை பிரதேச சபையின் உப தலைவர் உட்பட சில உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி இன்று இப்பாடசாலை ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் பெற்றோர்கள் மாவனல்ல பொலீஸ் நிலையத்தை சுற்றி வளைத்துள்ளனர்.


ஆசிரிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான ஆசிரியர்கள் பெற்றோர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பொலீசார் வழங்கிய உறுதிமொழியை அடுத்து  எதிர்ப்பு ஊர்வலம் நிறுத்தப்பட்டுள்ளது.




No comments