Breaking News

T20 world cup இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே அணியில் விளையாடும் அதிசயம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரிக்கட் போட்டி என்றால் அதை முழு கிரிக்கட்  உலகும் இரசிக்கும்


இந்த அணிகளில் விளையாடும் வீரர்களும் ரணகலத்தில் போரிடும் வேட்கையில் போராடுவர் அந்தளவுக்கு ஒவ்வொரு வீரருக்குள்ளும் புதைந்துள்ள அழுத்தத்தை அவர்களின் முகபாவங்களில் விளையாட்டு அங்க அசைவுகளில் உணரலாம்.


விளையாட்டு அரங்குகளில் இரு பிரிவாக நின்று ஆயிரக்கணக்கான இரசிகர்கள் கோஷம் எழுப்பி தத்தமது அணிகளுக்கு உந்து சக்தி வழங்குவர்.


இந்நிலைமைக்கு காரணம் இருநாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பூகோள இன ரீதியான முரண்பாடுகளாகும்.


இந்த அழுத்தம் நிறைந்த நிலையிலும் இரு அணியின் வீரர்களும் கனவான் விளையாட்டான கிரிக்கட்டின் பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து மதித்து வருவது வரவேற்கத்தக்க விடயமாகும்.


இந்திய பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கட் அணிகளின் நிலைமை இவ்வாறு இருக்க OMAN T20  கிரிக்கட் அணியில் ஓமானியர் ஒருவர் கூட இல்லை என தெரிவிக்கப்படுகிறது.


இவர்களில் 7 பேர் பாகிஸ்தானியர்கள் 4 பேர் இந்தியர்கள் இவர்கள் தமது தாய் நாடுகளிலிருந்து ஓமானுக்கு இடம் பெயர்ந்து அந்நாட்டின் கிரிக்கட் அணிக்காக விளையாடி வருகிறார்கள்.




No comments