Breaking News

SYU அமைப்பினால் புத்தளத்தில் இரண்டு நாட்கள் இரண்டு இடங்களில் மூலிகை மர நடுகை

சர்வதேச சே தினத்தை முன்னிட்டு சோஷலிச இளைஞர் சங்கம் SYU வினால் நாடு முழுவதும் நடத்தும் நிகழ்ச்சிகளுடன் இணைந்ததாக SYU புத்தளம் தொகுதி அமைப்பு ஏற்பாடு செய்த மூலிகை மர நடுகை நிகழ்வு முறையே 2021.10.19 ஆம் திகதி ரத்மல்யாய, முஹம்மதியா முன்பள்ளிப் பாடசாலையிலும், 2021.10.20 ஆம் திகதி கரைத்தீவு-பொன்பரப்பி ஆயுர்வேத மத்திய மருந்தகத்திலும் இடம்பெற்றன.


19 ஆம் திகதி ரத்மல்யாயவில் நடைபெற்ற மூலிகை மர நடுகை நிகழ்வுக்கு புத்தளம் பிரதேச சபையின் ஜேவீபீ உறுப்பினர் தோழர் அகில சம்பத் கலந்துகொண்டதுடன், முன்பள்ளிப் பாடசாலையின் பொறுப்பாசிரியை திருமதி தன்ஸிலா, முன்பள்ளிப் பாடசாலையின் முகாமைத்துவ உறுப்பினர் ஆசிரியர் உவைஸ், விருதோடை மு.வி. ஆசிரியர் பைசல், விஞ்ஞான பாட ஆசிரியர் பாசில் பாரூக் உட்பட ரத்மல்யாயவைச் சேர்ந்த பெரியவர்களும் இளைஞர்களும் கலந்துகொண்டனர்.


20 ஆம் திகதி கரைத்தீவு-பொன்பரப்பியில் நடைபெற்ற மர நடுகை நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் அஸ்வர், ஓய்வுபெற்ற உப தபால் அலுவலக அதிகாரியும் கரைத்தீவு மகளிர் சங்க தலைவியுமான திருமதி நவ்பரா, கரைத்தீவு தேசிய பாடசாலையின் ஆசிரியர்களான ரஸ்மி மற்றும் யாஸிர், இளைஞர் பாராளுமன்றத்தின் வண்ணாத்திவில்லு உறுப்பினர் அகில, சமூக ஆர்வலர்களான அதீக் மற்றும் இஸ்ரத் உட்பட பெரியவர்களும் இளைஞர்களும் கலந்துகொண்டனர்.


இவ் இரண்டு தினங்களிலும் மர நடுகைகைத் தொடர்ந்து கலந்துகொண்டவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் SYU வின் தோற்றம் முதல் (இன்று வரை) தொடராக மேற்கொள்ளும் பணிகள் பற்றியும் குறிப்பாக இனவாதத்துக்கு எதிரான முன்னெடுப்புக்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு உரித்தாக வேண்டிய அங்கீகாரத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டன.


மேலும், சர்வதேச பிரஜையாக மதிக்கப்படுகின்ற தோழர் சே குவாரா Che Guevara வின் வாழ்க்கையில் இருந்து இளைஞர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய உதாரணங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.


இக்கலந்துரையாடல்களில் கலந்துகொண்டவர்கள் ஆர்வத்துடன் பல விடயங்களைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக்கொண்டதுடன் ஆக்கபூர்வமான முன்மொழிவுக் கருத்துக்களையும் சமர்ப்பித்தனர்.


இரண்டு தினங்கள் இரண்டு இடங்களில் நடைபெற்ற மூலிகை மர நடுகையை ஏற்பாடுசெய்த SYU புத்தளம் தொகுதி அமைப்பின் இளைஞர்களின் முயற்சிகளை கலந்துகொண்டவர்கள் பாராட்டினர்.


News and Pics:

SYU (Puttalam Electorate Organisation) on 2012.10.19 and 20 


















No comments