இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த பெறுமதியான பொக்கிஷம் பெளத்த தர்மமே - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் பௌத்த தர்மம் ஆகும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கௌதம புத்தர் பிறந்த குஷி நகரில் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு முதலாவது விமானத்தில் சென்றடைந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடைபெற்ற இந்திய பிரதமருடனான சிநேக பூர்வமான கலந்துரையாடலின் போது பகவத் கீதையின் தமிழ் சிங்கள ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்துள்ளார்.
No comments