நேர்மையாக பணி செய்து விட்டு நாளை வீட்டுக்கு செல்லவும் ஜனாதிபதி தயார் - ஜனாதிபதி செயலாளர் பிபி ஜயசுந்தர
நேர்மையாகவும் சரியாகவும் பணி செய்துவிட்டு நாளைக்கும் வீட்டுக்குச் செல்ல ஜனாதிபதி தயாராக இருப்பதாக ஜனாதிபதி செயலாளர் பிபி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தவறுகளைச் செய்து செய்து பதவிக்காலம் முடியும் வரை இருப்பதைவிட நல்ல விடயங்களை செய்து நாளைக்கு வீட்டுக்கு சென்றாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்
சேதனப் பசளையில் தன்னிறைவு பெற்ற தேசமாக இலங்கையை மாற்ற ஜனாதிபதி முயற்சிக்கிறார் இதற்காக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்களை கோவிட் நெருக்கடியில் கடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது அதன்பின் தடுப்பூசி பெறுதல் உட்பட நோயை கட்டுப்படுத்த வேண்டிய செயற்பாடுகளில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது
எனவும் இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்ததால் ஜனாதிபதியின் செளபாக்கிய கொள்கையை நடைமுறைப்படுத்த போதிய காலம் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments