"சுபீட்சத்தின் நோக்கு" வேலைத்திட்டத்தின் கீழ் வீடு நிர்மாணப்பணிக்கான காசோலை வழங்கி வைப்பு
ஜனாதிபதியின் "செளபாக்கியத்தின் நோக்கு" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பிரதேச சபைக்குட்பட்ட மொரோகொல்ல பிரதேசத்தின் தெதிலியங்க கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடும்பம் ஒன்றிற்க்கான புதிய வீடு நிர்மாணிப்பதற்காக ஆறு இலட்சம் ரூபா அடங்கிய முதல்கட்ட காசோலை அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் வேலைத்திட்டம் இப்பாகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் குருநாகல் மாவட்ட மஹஜன ஐக்கிய முன்னணியின் அமைப்பாளருமான ஏ.ஆர்.எம். வாஜிப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஹிரியால தொகுதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அமைப்பாளருமான யூ.கே. சுமித் உடுகும்புரவின் ஒத்துழைப்பில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராம சேவகர், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டதோடு அப்பகுதியில் வசிக்கும் மேலும் சிலருக்கு வீடு நிர்மாணப்பணிக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எம். ஆர். சியாஉர் ரஹ்மான்
பறகஹதெனிய
No comments