கிரிக்கட் சூதாட்ட விசாரணையில் திருப்தி இல்லை - மீண்டும் புரளியைக் கிளப்புகிறார் அமைச்சர் அலுத்கமகே
2011 ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின்போது கிரிக்கட் சூதாட்டம் இடம்பெற்றுள்ளது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வலியுருத்தியுள்ளார்.
சாட்சியங்கள் அத்தாட்சிகள் எதுவும் இல்லாத முறைப்பாடு என இதனை விசாரணை செய்த குழு இதற்குத் தீர்ப்பு வழங்கியந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மஹேல சங்கக்கார அரவிந்த போன்றவர்கள் குற்றம் செய்தார்கள் என நான் கூறவில்லை.
ஆனால் அன்றைய இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் முகாமையாளர்
டி.எஸ்.டி சில்வா செயலாளர் நிஷாந்த ரணதுங்க பொருளாளர் சுராஜ் தந்தெனியா ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் விசாரிக்கப்படவில்லை எனவே இவ்விடயத்தில்
தனது குற்றச்சாட்டில் தான் உறுதியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments