Breaking News

மதுரங்குளி மீடியாவின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

ஆசிரியராக இருப்பதே சமூகத்துக்கு செய்யும் சேவை. மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகளான அவர்களால் தான் ஒரு மாணவனுக்குள் நம்பிக்கை எனும் விதையை விதைக்க முடியும். பொதிந்து கிடக்கும் கற்பனைத் திறனை தூண்டி, அவர்களின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கான உந்து சக்தியை கொடுக்க முடியும். இப்படியான தன்னலமற்ற சேவைகளை செய்து வரும் ஆசிரியர்களின் பணியை கொண்டாடுவது தான் ஆசிரியர் தினம்.


மாணவனாக வந்த எங்களை நண்பனாக வழிநடத்தி, சிறந்த கல்வியாளராக விளங்கியமைக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். 

நீங்கள் கற்பிக்கும் விதம்..

நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறிவு..

நீங்கள் எங்கள் மீது காட்டும் அன்பு..

இவற்றை பார்க்கும் போது நீங்கள் தான் உலகின் சிறந்த ஆசிரியர்!

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!


புத்தகங்களை விட பொது அறிவை கற்றுக் கொடுத்தவர் நீங்களே..

ஒன்றும் தெரியாத பருவத்தில் என் கைப்பிடித்து எழுதக் கற்றுக் கொடுத்தீர்கள்..

என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என் அதிர்ஷ்டம்..

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!


நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல, என் உத்வேகத்தின் வழிகாட்டியும் நீங்களே!

உங்களை நாங்கள் பெற்றிருப்பது எங்கள் அதிர்ஷ்டம்

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!


என் புத்தகத்தில் ஆயிரம் கதாபாத்திரங்கள் இருந்தாலும் நீங்கள் தான் என் ஹீரோ. உங்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!


நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல

அதையும் தாண்டி எங்கள் நண்பர், வழிகாட்டி மற்றும் தத்துவவாதியாக திகழ்பவர்

இவையனைத்தும் ஒரே நபராக வடிவமைக்கப்பட்ட எங்கள் ஆசான்

உங்கள் ஆதரவுக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!


வாழ்க்கையில் துணிச்சலாக கேள்வி கேட்கவும், ஆச்சரியப்படவும், சிந்திக்கவும் என்னைத் தூண்டியது நீங்கள்தான். எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!!


நீங்கள் பல திறமைகளைக் கொண்ட மனிதர். ஒரு சிறந்த ஆசிரியர், எழுச்சியூட்டும் முன்மாதிரி, சரியான வழிகாட்டியாக விளங்கியவர். இந்த ஆசிரியர்கள் தினத்தில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


அறிவென்னும் விளக்கேற்றி

அன்பெனும் வழிகாட்டி

சந்தனத் தென்றலாய் வலம் வந்து குளிர்  

சந்திரனில் நன்மையைக்  கொண்டு 

கனியமுத மொழியோடு 

கல்வி தனிப் போதிக்கும் 

மரியாதைக்குரிய அனைத்து ஆசான்களுக்கும்

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!


உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் இன்று இலங்கையில் கொண்டாடப்படுகிறது ஆசிரியர்களாக உள்ள அத்தனை மெழுதிரிகளுக்கும் மதுரங்குளி ஊடக வலையமைப்பின் சர்வதேச ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !


உங்களது போராட்டம் வெற்றி பெற எமது பிராத்தனைகள் உரித்தாகட்டும் 🤲




No comments

note