ஞானசார தேரர் கூறும் தாக்குதல் அச்சுறுத்தல் CID சென்றது - ஐக்கிய மக்கள் சக்தி
நாட்டில் இன்னொரு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக கூறப்படும் தகவல் முறைப்பாடாக இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் பதிவு செய்யப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச
இவ்விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு மனு ஒன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவில் சமர்ப்பித்துள்ளார்.
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பல இடங்களிலும் தெரிவித்த கருத்துக்களை
ஆதாரமாக வைத்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு தாக்குதல் நடத்தபடும் விடயம் தாக்குதல் நடத்துபவர்கள் நடத்தப்படும் இடம் போன்ற பல தகவல்கள் ஞானசார-தேரருக்கு தெரியும் என்பதால் இவ்விடயமாக விசாரணை நடத்தி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இந்த மனுவில் வேண்டியுள்ளார்.
No comments