சீமெந்து கோதுமை மாவின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்
சீமெந்து மற்றும் கோதுமை மாவின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் இவற்றின் விலைகள் அதிகரித்துள்ளமையால் இறக்குமதியாளர்கள் இவற்றின் விலை களை அதிகரிக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றிடம் அனுமதி கேட்டுள்ளன.
இவற்றின் விலைகளை அதிகரிக்க கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் தமக்கு சாதகமான பதில் கிடைக்கும் எனவும் இப்பொருள் இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments