Breaking News

இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு !

நூருல் ஹுதா உமர் 

அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை  வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் எதிர்கால செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன பிரதித்தலைவர் எம்.எம். றுக்சான் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வானது அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளன நிருவாக உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் கலந்து கொண்டு அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை வழங்கி வைத்தார்.


இந்த நிகழ்வில் எதிர்காலத்தில் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்கள் சம்மேளனம் முன்னெடுக்க வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு அக்கரைப்பற்று பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










No comments