மக்களுக்கு சலுகை வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் டில்வின் சில்வா எச்சரிக்கை
கோவிட் நெருக்கடியால் பல விதங்களிலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இந்த உதவிகளை அரசாங்கம் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகள் வரும் போது அரசாங்கம் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் ஆனால் சலுகைகள் எவ்வாறு போனாலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்களின் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்து வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு மேலும் மேலும் நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படாத விடத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments