Breaking News

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டமும் ,மர நடுகையும்

ஐ.எல்.எம் நாஸிம் 

73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி தேசிய கீதங்கள் பல்வேறு பகுதிகளில்  இயற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில்   பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா  தலைமையில் இன்று (4)  காலை   பிரதேச செயலக வளாகத்தில் நிகழ்வுகள்  நடைபெற்றன.

இதன் போது பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு  . தேசிய கீதம் பாடப்பட்டு மரியாதை செய்யும் நிகழ்வு இடம்பெற்றதுடன் பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்றுகள்   நாட்டியும் வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம் ஆசீக் , கணக்காளர் ஐ.எம்.பாரிஸ், சமுர்த்தி முகாமையாளர் யூ.எல்.எம். சலீம்,நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.பாரூக், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், ஏ.எல்.எம். அஸ்லம் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






No comments

note