இலங்கையில் இருந்து சர்வதேச மனித உரிமைகள் நிலைக்குழுவில் புத்தளம் ஏ.எம்.எம்.அஸ்ஜத் தெரிவு.
பல நாடுகளை மையமக வைத்து இயங்கி வரும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் மதுரங்குளி, கணமூலையை சேர்ந்த அப்துல் முனாப் முகம்மது அஸ்ஜத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர், சென்ற வருடம் மலேசியாவில் நடைபெற்ற உலகளாவியரீதியில் பல்வேறு துறைகளை சார்ந்த இளம் நிபுணத்துவம் வாய்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளும் ஆசிய இளைஞர் மாநாட்டில் கலந்து சிறப்பித்துள்ளார்.
மேலும் இவர் பிரபல்யமான அரபுக்கல்லூரி, புத்தளம் காஸிமியா அரபு கல்லூரியில் கல்வி கற்று , (A/L ) உயர் தரத்தில் அதி சிறந்த சித்தி எய்தி, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில், வணிக முகாமைத்துவப் பீடத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments