மருதமுனை பிரதேச மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக் கொண்டனர்.
(சர்ஜுன் லாபீர்)
மருதமுனை கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் இன்றைய வேண்டுகோளுக்கிணங்க மருதமுனை முதல் பெரியநீலாவனை வரை இன்று(9) மாலை 7.00 மணியில் இருந்து தங்களை சுய தனினைப்படுத்திக் கொண்டதை காணக்கூடியதாக உள்ளது.
இப் பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும்,வீதி போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
இதனூடாக மக்கள் கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் வேண்டுகோளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்கள் வழங்கி இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
No comments