Breaking News

ஜனாஸா எரிப்புக்கு எதிராக புத்தளத்தில் ஆர்பாட்டம்.

கொவிட்- 19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு  எதிப்பு தெரிவித்தும் அதனை நல்லடக்கம் செய்ய அனுமதி கோறியும் அரசாங்கத்தை வழியுறுத்துமுகமாக இன்று (28) புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைதி ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.


புத்தளம் ஐக்கிய மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ், நகர, பிரதேச சபை உறுப்பினர்கள்,  இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள்  கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

ஆர்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு சமர்பிக்க மகஜரொன்றும் கையொப்பமிடப்பட்டது.
















No comments