Breaking News

சாய்ந்தமருதில் உலமா சபை முன்னெடுத்த கோவிட்-19 கொரோனா தொற்று விழிப்புணர்பு பிரச்சார நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர் 

சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை ஏற்பாடு செய்த கோவிட்-19 கொரோனா தொற்று விழிப்புணர்பு பிரச்சார நடவடிக்கை இன்று மாலை சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.எம். சலீம் சர்க்கி அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்றது. 

ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு சொற்பொழிவை சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் ஆதம்பாபா ரஷாதி நிகழ்த்தினார். இந்த விழிப்புணர்பு பிரச்சார நடவடிக்கையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். அஜ்வத், சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை உலமாக்கள், சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, செயலாளர் அப்துல் மஜீத் ரோஷன் மரிக்கார், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் ஜெ.எம். நிஸ்தார் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்பு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.











No comments

note