நிந்தவூரில் சுய தனிமைப்படுத்தப்பட்ட 91 குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கிவைப்பு
(யாக்கூப் பஹாத்)
நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவில், 2020 அக்டோபர் 3ஆம் திகதிக்கு பின்னர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட 91 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் இற்றை வரையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்த குடும்பங்களுக்கு இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு கட்டத்திலும் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
78 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு,13 குடும்பங்களுக்கு முதற்கட்ட 5000 ரூபா பெறுமதியான உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
No comments