Breaking News

பொது போக்குவரத்தில் நாளை முதல் கடுமையாக அமுலாகும் சட்டம்

MADURAN KULI MEDIA 
06/12/2020

நாளைய தினம் முதல் ஒவ்வொரு பயணத்தின் தொடக்கத்திலும் இரண்டு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார்.

விசேடமாக புதிய பயண முறைக்கமைய, பாடசாலை நேரத்திலும் அலுவலக நேரத்திலும் இரண்டு பேருந்துகளை இயக்க போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் ஆசனங்களுக்கு மாத்திரம் போக்குவரத்து பயணம் மேற்கொள்வதற்காக கடந்த காலங்களில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் சில பகுதிகளில் அதிகமாக பயணிகள் பேருந்துகளில் அழைத்து செல்லப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

எங்களுக்கு அது தொடர்பில் கடிதம் மூலம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நாளை முதல் அவ்வாறு செய்யும் பேருந்துகளின் சாரதிகளை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)




No comments

note