மதுரங்குளி மேர்சி நிறுவனம் மூலம் புத்தளம் தள வைத்தியசாலைக்கு உதவி
மேர்ஸி லங்கா அமைப்பு, ரஹ்மா சர்வதேசஅமைப்புடன் இணைந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு 11 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகாரணங்களை அன்பளிப்பு செய்துள்ளது
ஐந்து வகையான 40 ட்ரொளிகள் மற்றும் 60 சிறிய ரக அலுமாரிகள் ஆகிய பொருட்களே அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.மேர்ஸி லங்கா அமைப்பின் பணிப்பளார் அஷ்ஷேஹ் பெளசுர் ரஹ்மான் மற்றும் உதவி பணிப்பளார் அஷ்ஷேஹ் எம்.ஆர்.எம். முனாஸ் ஆகியோர் புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சுமித் அத்தநாயக்கவிடம் இவற்றினை கையளித்தனர்.
முந்தல் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஜெளஸி , புத்தளம் வைத்தியசாலை விசேட வைத்திய நிபுனர் அமில டி சில்வா, நிர்வாக அதிகாரி திருமதி மல்காந்தி , மேல் தாதி அதிகாரி குமுது செபஸ்டியன் பில்லை, வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹ்ஸி உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி - புத்தெழில் -
No comments