தனது "The Puttalam Times" முகநூல் பக்கம் திருடப்பட்டதாக ஹிஷாம் ஹுசைன் முறைப்பாடு!
அரசியலில் நேர்மை தவறாதீர்!
The Puttalam Times என்ற FB page தற்போது ASR Live எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுவொரு மோசடி.
The Puttalam Times (TPT) என்ற FB page எனது பங்களிப்புடனும் இன்னும் பலருடைய ஒத்துழைப்புடனும் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது.
அந்த வகையில் The Puttalam Times (TPT) என்பது, அதன் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் உழைத்த ஒவ்வொரு மனிதருக்கும் சொந்தமான 'புலமைச் சொத்து'.
தற்போது தனிமனிதர் ஒருவரின் பெயரில் மாற்றப்பட்டு, நடைபெறும் தேர்தல் காலத்தில் அவருடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக பாவிக்கப்படுமாயின், ஒருவகையில் குற்றம், இன்னொரு வகையில் மோசடி!
மேலும் நான் இதன் Admin என்பதை வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் தற்போது நான் Admin என்பதிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். (பலர் இணைந்து நடத்தும் பேஜ்களில் இவ்வாறு ஒருவர் இன்னொருவரை நீக்க முடியும்).
இறுதியாக, உங்கள் தேவைக்காக எத்தனை FB page களையும் உருவாக்கலாம். அது உங்கள் தனிப்பட்ட விடயம். ஆனால், அடுத்தவர் உழைப்பைச் சுரண்டாதீர்!
நீங்கள் அரசியல் செய்யலாம். அது உங்கள் ஜனநாயக உரிமை.
ஆனால் நேர்மை தவறாதீர்!
No comments