ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கு ரவூப் ஹக்கீம் மீண்டும் முயற்சி.
கொழும்பு மருதானையில் COVID-19 வைரஸ் தொற்றினால் மரணித்த ஜனாஸாவை மாலிகாவத்தை மையவாடியில் அடக்கம் செய்வதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீண்டும் உயர் மட்டத்தில் கதைத்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
அவருடன் நெருங்கிய ஒருத்தருடன் எமது இணையம் தொடர்புகொண்டு கேட்டபோது இவ்வாறு பதிலளித்தார்;
அரசாங்க உயர் மட்டம், அரசாங்க வைத்தயர்கள் சங்கம் (GMOA) உள்ளிட்ட மட்டங்களில் அவர் அது தொடர்பாக மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை நீங்கள் செய்திகளிலும் சோசியல் மீடியாக்களிலும் பதிவிட வேண்டாம். இது முஸ்லிம் சமூகத்திற்காக செய்யும் ‘பர்ளு கிபாயா’. நீங்கள் இந்த தகவலை போட்டால் இனவாதிகளுடன் எங்களில் சில பேரும் அந்த மனிதருக்கு ஏசுகிறார்கள். என்று அவர் தெரிவித்தார்.
நேற்றைய முன்தினம், நீர் கொழும்பில் மரணித்தவரை அவசரமாக எரிக்கப்படுவதை அறிந்த ரவூப் ஹக்கீம், அதனை தடுப்பதற்கு அன்று நடு நிசி வரை முயற்சி செய்தபின்னரும்கூட வைத்தியசாலை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை.
அந்த ஜனாஸாவை எரித்தமைக்கக அரசாங்கத்தை கண்டித்தமையில் சிங்களவர்கள் மாத்திரமல்ல முஸ்லிம் சகோதர்ர்களும் சேர்ந்து ரவூப் ஹக்கீமை இனவாதிகளுக்கு காட்டிக் கொடுத்தது மாத்திரமல்ல, சமூக ஊடகங்களிலும் வசைபாடத் தொடங்கினார்கள்.
அது மாத்திரமல்லாமல் இன்று வசந்தம் TV யில் கூட ரவூப் ஹக்கீம் ஜனாஸாவை நல்லடக்கம் செய்யக் கோரியது தவறு என சுட்டிக்காட்டி 5 நிமிட செய்தியாக வெளியிட்டது.
என்றாலும், கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படத்தான் வேண்டும் என உத்தரவிட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசிங்க, இன்று சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
No comments