புத்தளம் முஸ்லிம் ஹேண்ட்ஸ் அமைப்பினால் கொரோனா பாதுகாப்பு அங்கிகள் கையளிப்பு
புத்தளம் முஸ்லிம் ஹேண்ட்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் நோக்கில் புத்தளம் ஆதார வைத்தியசாலை, சிலாபம் பொது வைத்தியசாலை, மாதம்பை வைத்தியசாலை, புத்தளம் இராணுவ முகாம் மற்றும் வான்படை முகாம் ஆகியவற்றிற்கு கொரோனா பாதுகாப்பு அங்கி (Personal Production Kit) முஸ்லிம் ஹேண்ட்ஸ் அலுவலகத்தில் வைத்து இன்று (01) கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு முஸ்லிம் ஹேண்ட்ஸ் அமைப்பின் பணிப்பாளர் ஏ.எம். மிஹ்லார் தலைமையில் இடம்பெற்றது.
கொரேனா வைரஸ் தொற்று இனங்கனப்பட்டவர்களை பரிசோதனை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் சுகாதார தரப்பினருக்கும் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் பாதுகாப்பு கடைமையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கும் வழங்குவதற்கென 400 கொரோனா பாதுகாப்பு அங்கி (Personal Production Kit) இலவசமாக கையளிக்கப்பட்டது.
No comments