Breaking News

முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா

முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியின் இல்லத்தில் இன்று காலை கூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவிப்பதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
அதேவேளை அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தாலும், தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவளிக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. 


No comments