Breaking News

உலகத் தமிழ் கலை பண்பாட்டு சர்வதேச அமைப்பின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சுபியானி நியமனம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

உலகம் முழுவதும் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து சமூக, கலை, பண்பாட்டு பணிகளை முன்னெடுத்து வரும் உலகத் தமிழ் கலை பண்பாட்டு சர்வதேச அமைப்பு இலங்கை வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செல்வி முகம்மது பாரூக் பாத்திமா சுபியானி நியமிக்கப்படுள்ளதாக அமைப்பின் சர்வதேச தலைவர் கலாநிதி எஸ். எம். ரஸ்மி ரூமி அறிவித்துள்ளார்.


இலங்கையின் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.முகம்மது பாரூக் பாத்திமா சுபியானி சிறுவயது முதல் சமூக சேவை, தொழில் முன்னேற்றம், மக்களிடையேயான ஒற்றுமை, வறுமை ஒழிப்பு, வாழ்வாதார மேம்பாடு போன்ற துறைகளில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருபவர்.


அவர் தற்போது மனித உரிமைகள் பாடநெறியின் புத்தளம் மாவட்ட இணைப்பாளராகவும், சமாதான நீதிவானாகவும், மத்தியஸ்த சபை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் பல்வேறு சமூக நலத் தொண்டுகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்.


மேலும், புத்தளம் மாவட்டத்தில் இன நல்லுறவை மேம்படுத்தும் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்து வரும் சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார்.


அதேபோல்,....

1. புத்தளம் மாவட்ட சமாதான தூதுவர்

2. Sri Lankan Branch of Cholan Book of World Records (CBWR) புத்தளம் மாவட்ட தலைவி

3. ஒரு தேசத்தின் சிறுவர் அறக்கட்டளை புத்தளம் மாவட்ட தலைவர்

4. பன்னாட்டு மனித உரிமைகள் பேரவையின் புத்தளம் மாவட்ட தலைவி 

5. SAARC HUMAN RIGHTS FOUNDATION தின் புத்தளம் மாவட்ட தலைவி

6. புத்தளம் மத்தியஸ்த சபை உறுப்பினர் 


ஆகிய பொறுப்புகளிலும் பணியாற்றி வருகிறார்.


சமூக சேவையில் சிறந்து விளங்கியதற்காக 28க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளிடமிருந்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் சில:

தேச அபிமானி, வனிதா அபிமானி, கலாவிபூஷணம், சமூக சுடர், தேசபந்து போன்ற பெருமைக்குரிய விருதுகள் ஆகும்.


23 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் இவர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு, பெண்கள் பொருளாதார வலுவூட்டல், போதைப்பொருள் மற்றும் மதுபான நிவாரண திட்டங்கள், பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வு, ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவ முன்னேற்றம், சிறுபான்மை மக்களின் அரசியல் பங்கேற்பு ஆகிய துறைகளிலும் சேவையாற்றி வருகிறார்.


சமூகத்தில் நலிவுற்ற மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை வலுப்படுத்தி, அவர்கள் தங்களது உரிமைகள் குறித்து தாங்களே குரல் கொடுத்து, உள்ளூர் ஆட்சியில் பங்கேற்று மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தோடு அவர் செயல்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




No comments