JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வணாத்தவில்லு எரிப்பு உலைக்கு கொண்டு வரப்படவுள்ள போதைப்பொருட்கள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்க் கொள்ளபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் நீதிமன்ற வழக்குகள் நிறைவடைந்துள்ள சிலாபம் மற்றும் பலப்பிட்டி நீதவான் நீதிமன்றங்களில் இருந்து ஹெரோயின் 22 கிலோ 888 கிராம் , கேரள கஞ்சா 33 கிலோ 172 கிராம் மற்றும் கஞ்சா 247 கிலோ 940 கிராம் என்பன திங்கட்கிழமை (27) காலை 9 மணிக்கு  புத்தளம் வணாத்தவில்லு லெக்டோவத்தையில் அமைந்துள்ள எரிப்பு உலைக்கு கொண்டுவரப்பட்டு  அழிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது 


அதன்படி பலப்பிட்டி நீதிமன்ற வளாகத்திலிருந்து காலை 5 மணிக்கும் சிலாபம் நீதிமன்ற வளாகத்திலிருந்து காலை 7.30 மணிக்கும் மேற்படி போதைப் பொருட்கள் புத்தளம் வணாத்தவில்லு லெக்டோவத்தை எரிப்பு உலைக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال