JobVibe.lk - Sri Lanka Job Portal

காலி மாவட்ட இமயம் மலையகப் பெண்கள் சம்மேளனம் மறுசீரமைப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

பெருந்தோட்டத்துறை மக்கள்  குரல் அமைப்பினால் (VOPP)  காலி மாவட்ட இமயம் மலையகப்  பெண்கள் சம்மேளனத்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி திட்டம் (ஏப்ரல் 18) சனிக்கிழமை பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் காலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. ஹர்ஷனி தலைமையில் காலியில் இடம்பெற்றது 


இதில் இந்நிகழ்ச்சி, அமைப்பின் திட்ட பிரதானியும் பெண்கள் திட்டப் பொறுப்பாளருமான லவீனா ஹசந்தி மற்றும்  அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் அன்டனி ஜேசுதாஸன் ஆகியோர் கலந்து கொண்டனர்


பெண்கள் சம்மேளனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து சிறப்பு உரையாற்றப்பட்டதுடன்


 தற்போதைய சமூகத்தில் மலையகத் தமிழ் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆழமாகவும்  கலந்துரையாடல் இடம்பெற்றது. தங்களது வாழ்க்கை  நிலைமைகள் குறித்து கருத்துக்களையும் பகிர்ந்த பல பெண்கள்

தங்களது மூதாதையர் காலத்திலிருந்து இன்றுவரை ஒரே ‘லைன்’ அறைகளில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவது குறித்து அவர்கள் சுட்டிக்காட்டினர். தற்போதும் தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


சம்மேளனத்தின் இறுதியில், அடுத்த மூன்று மாதங்களுக்கு சிறப்பு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டதுடன், அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகளை வலுப்படுத்த புதிய நிர்வாகக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال