இலாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி; புதிய மாணவியர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல் - 2026
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரிக்கு (Reg.No. MRCA/131/AC/29) புதிய மாணவியர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
கலைப் பிரிவு (Arts Stream) உடன் இணைந்த மூன்று வருட இஸ்லாமிய ஷரிஆ டிப்ளோமா கற்கைநெறி மூலம் "பல்துறை தேர்ச்சி மிக்க இஸ்லாமியப் பெண் ஆளுமைகளை உருவாக்குதல்" எனும் இலக்கோடு குருணாகல் மாவட்டத்தில் அறக்யாள கிராமத்தில் 1961 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரியாக இக்கல்லூரி இயங்கி வருகின்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆளுமைகளை (மௌலவியாக்கள், ஆசிரியைகள், அதிபர்கள்…) உருவாக்கி சாதனையும் படைத்துள்ளது.
அரச பாடசாலையுடன் இணைந்து, ஆரோக்கியமானதோர் ஆன்மீகச் சூழலில் பாடசாலைக் கல்வியையும் ஷரீஆக் கல்வியையும் (ஆலிமா) பெற்றுக்கொள்வதற்கான நல்லதோர் வாய்ப்பையும் வழங்கி வருகின்றது.
இப் பெண்கள் அரபுக்கல்லூரியானது கிரி/ அறக்யாள முஸ்லிம் மகா வித்தியாலயத்துடன் இணைந்து பாடசாலைக் கல்வியை (கலைப்பிரிவிற்கான பாடங்கள்) கற்பதற்கான வாய்ப்பையும் வழங்கி, தமிழ், இஸ்லாமிய நாகரிகம், இஸ்லாம், அரபு, மனையியல், புவியியல், பொருளியல், தகவல் தொழிநுட்பம், அரசியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
பகுதி நேர ஷரிஆ கற்கை பிரிவில் அல்குர்ஆனிய அரபு, தஜ்வீத் கலை, ஹிப்ழ் போன்றவற்றுடன் தீனிய்யாத் பாடங்களான (ஷரிஆ பாடங்கள் - அல் ஆலிமா), அஹதிய்யா இறுதிச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
அத்தோடு, திறன் விருத்தி கற்கைகளான, தர்பிய்யா அமர்வுகள் (ஆன்மீக வழிகாட்டல்கள்), ஆரம்ப நிலை கணினி கற்கை, தலைமைத்துவ பயிற்சிகள், மென்திறன் (Soft Skills) வழிகாட்டல்கள், எழுத்தாற்றல்,பேச்சாற்றல் விருத்தி கழகங்கள்(Clubs), சமையல், தையல் கற்கைகள் போன்ற கற்கைகளும் போதிக்கப்படுகின்றன.
இப்பெண்கள் அரபுக் கல்லூரியின் விசேட சிறப்புகளாக, திறமையும் அனுபவமும் மிக்க ஆசிரியர் வளம், நிர்வாகக் குழு, பாதுகாப்பான இஸ்லாமியச் சூழலுடனான வதிவிட (HOSTEL) வசதியும் கொண்டதாகவும் காணப்படும் அதேவேளை, மத்ரஸா மதிலுடன் இணைந்த வகையில் கிரி/ அறக்யாள முஸ்லிம் மகா வித்தியாலயம் அமையப்பெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.
இந்தப் பெண்கள் அரபுக்கல்லூரியில் இணைந்து கல்வி கற்க விரும்பும் மாணவிகள் உங்கள் பெயர் மற்றும் முகவரியை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் 077 976 7950 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களை அதிபர்: 072734 8030, நிர்வாகக் குழு தலைவர்: 077 577 5757, அதிபர் (அறக்யாள முஸ்லிம் மகா வித்தியாலயம்): 076 629 8790 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

No comments