JobVibe.lk - Sri Lanka Job Portal

மணல்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவின் விசேட தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடு.

எம்.யூ.எம். சனூன் 

புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  மணல்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவின் விசேட  தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றுக்கான அடிக்கல் ஞாயிற்றுக்கிழமை (26) காலை நாட்டப்பட்டது.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் இதற்கான அடிக்கல்லினை  நாட்டி வைத்தார்.


அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலக நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 


தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும், பிரஜா சக்தி தலைவருமான முஹம்மது ஜிப்ரி,  தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி பிரிவின்  உத்தியோகத்தர், வீட்டு பயனாளிகள், கிராம சேவகர் பிரிவின் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டுதிட்ட உத்தியோகத்தரும் கலந்துகொண்டார்கள்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال