பிரதமரை சந்தித்த பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
பிரான்ஸ் செனட் சபையின் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற குழுவின் தலைவியும் செனட் சபை உறுப்பினருமான Vanina Paoli-Gagin தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகாலக் கூட்டுறவைக் கட்டியெழுப்புவதன் ஊடாக, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






No comments