JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபிர் முன்பள்ளியின் வருடாந்த சந்தை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபிர் முன்பள்ளியின் வருடாந்த சந்தை வியாழக்கிழமை (23) பாடசாலையின் அதிபர் எம்.ஜே.என் பாஹீமா தலைமையில் இடம்பெற்றது 


இச் சந்தையின் ஆரம்ப நிகழ்வு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் முன்பிள்ளை அபிவிருத்தி அதிகாரி  எச்.எம் நிப்ராஸ் , கிராம உத்தியோகத்தர்களான பீ.எம்.எய் றுமைஸ்,  மற்றும் ஏ.ஆர்.எம் முஷாதிக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்


சிறார்களை சிறு பராயம் முதலே கொடுக்கல் வாங்கல் விடயங்களை தெளிவூட்டல் மற்றும் பணப் பெறுமதியை அறிந்து கொள்ளச் செய்தல் வர்த்தக நடவடிக்கைகளை இஸ்லாமிய முறையில் கற்றுக் கொடுத்தல் என்பன போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இச் சிறுவர் சந்தை வருடாந்தம் இடம்பெற்று வருவதாகவும் இந் நிகழ்விற்கு பெற்றோர்களின் முழுமையான பங்களிப்பு கிடைப்பதுடன் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகளுக்கும் அதிபர் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال