JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு...!.

(எம். எச். எம். சியாஜ்)

கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜிலிஸினால் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.


பாடசாலையின் அதிபர் ஐ. என். எம். எம். லாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் எஸ். எம். எம். ஹனிபா (ஓய்வு நிலை) மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், ஜும்மா மஸ்ஜித் தலைவர் கே. எம். இம்தியாஸ், செயலாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


குறித்த பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கு  கனமூலை ஹுதா லங்கா ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை தமது பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்களுக்கும், இதனை ஏற்பாடு செய்த கனமூலை ஹுதா லங்கா நிறுவனத்திற்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள் சார்பாக அதிபர் இவர்களை பாராட்டி வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.


















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال