JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ஆனைவாசலில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

​தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் கற்பிட்டி ஆனைவாசல் கிராமத்தில்  வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். மேற்படி நிகழ்வு கற்பிட்டி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சமன் குமார ஹேரத் தலைமையில் அனைவாசல் தேசிய மக்கள் சக்தி (NPP)யின் மக்கள் பணிமனையில் இடம்பெற்றது 


​மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில், பிரதேச மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


​இதில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். றிகாஸ், கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் எம்.டி. இப்ஹாம்​மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களும், இம் மக்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.


இதன்போது பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், அவற்றுக்கான துரித தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் அத்தோடு​மக்களுக்கான சேவையை முன்னிறுத்தி, தொடர்ச்சியாக இவ்வாறான களப்பணிகள் இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال