JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் செம்மாந்தழுவையில் புதிய வீடு கையளிக்கும் நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  புத்தளம் கிழக்கு,(செம்மாந்தழுவை) கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறிய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்றை அரசாங்க நிதியுதவியுடன் நிர்மாணித்து ஞாயிற்றுக்கிழமை (26)  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம்.பைசல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது 


இந்நிலையில் புத்தளம் மாநகர சபையின் மேயர்  ரின்ஷாட் அஹமட், மாநகர சபையின் உறுப்பினரும்   பிரஜா சக்தி தலைவருமான  இப்லால் அமீன், மாநகர சபையின் உறுப்பினர் சிபாக் ,தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும்  வீட்டு பயணாளிகளும் அக்கிராம சேவகர் பிரிவின் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இவ்வாறான வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீட்டுக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவு தெரிவிக்கப்பட்டது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال