களனி பல்கலைக்கழக மொழியியற்த்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற கற்பிட்டி கிராம உத்தியோகத்தர் அர்ஷத்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியற்துறையினால் நடாத்தப்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு (Diploma in Translation and Interpretation) கற்கைநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த கற்பிட்டி கிராம உத்தியோகத்தர் எம் பீ.எம். அர்ஷத் ஞாயிற்றுக்கிழமை (26) களனி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற தர்மாலோக மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்ற பட்டமளிப்பு விழாவில் தனது டிப்ளோமா பட்டத்தை மனிதநேய பீடத்தின் பீடாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் மானிடப்பண்பாட்டியல் பீடத்தின் (Faculty of Humanities) மொழியியல் துறையினால் (Department of Linguistics) இக்கற்கைநெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தராகப் பணியாற்றி வரும் எம் பீ.எம் அர்ஷத் தனது அரச பணிக்கு மத்தியிலும் கல்விப் புலத்தில் காட்டி வரும் இந்த ஆர்வம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, இருமொழித் தேர்ச்சியும் மொழிபெயர்ப்புத் திறனும் ஒரு அரச உத்தியோகத்தருக்குத் தனது சேவையை பொதுமக்களுக்கு இன்னும் வினைத்திறனாக வழங்கப் பெரிதும் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.




No comments