JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய வீடமைப்பு நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்கான காசோலை வழக்கும் நிகழ்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

அனைவருக்கும் உறைவிடம் – அழகிய வாழ்க்கை என்ற அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு இன்று புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ சுதம்பய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்கள் தலைமையேற்று கலந்து கொண்டார். அத்தோடு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி மாவட்ட அமைப்பாளர்    கயான் ஜானக ,புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜே.எம். பைசல்,  அஜீத் ஜிகான் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும்  128 வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன. 


தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் நீண்டநாள் வீடமைப்பு கனவு நனவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


மேலும், இந்நிகழ்வில் ஆனமடுவ மற்றும் பல்லம பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், வீட்டு பயனாளிகள் மற்றும் வீட்டுத்திட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال