JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரைட் ஹேன்ஸ் ஜனாஸா சங்கத்தின் ஜனாஸா வாகனம் நிறுத்துமிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி வாழ்  மக்களின் நிதி பங்களிப்பின் ஊடாக கற்பிட்டி பிரைட் ஹேன்ஸ் ஜனாஸா சங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஜனாஸா வாகனத்திற்கான நிரந்தர தரிப்பிடம் இல்லாத நிலையில் ஜனாஸா சங்கத்தினர் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக கற்பிட்டி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் வளாகத்தில் அதன் நிர்வாகத்தினரால் அதற்கான காணி வழஙகப்பட்டது


அதன் நிமித்தம் முதற்கட்டமாக ஊர் மக்களின் நிதிப் பங்களிப்புடன் ஜனாஸா  வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கான கட்டிடத்திற்கான அடிக்கல் திங்கட்கிழமை (23) ஜனாஸா சங்கத்தின் தலைவர் ஏ.ஜே.எம் தாரிக் தலைமையில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எஸ் எம் றிகாஸின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது 


மேலும் இதன்போது தெரிவிக்கப்பட்டதாவது முதற்கட்டமாக ஜனாஸா வாகனம் நிறுத்துவதற்கான கட்டிடம் அமைப்பதற்கு 25 இலட்சம் நிதி பொது மக்களினால் வழங்கப்படாடுள்ளதாகவும்  அதனுடன் இணைந்ததாக ஜனாஸா சங்கத்தின் காரியாலயம், களஞ்சியசாலை மற்றும் ஜனாஸா குளிப்பாடாடும் அறை என்பனவும் மக்களின் நிதி பங்களிப்புடன் விரைவில் நிர்மாணிப்பதற்கான திட்டமிடல்கள் மேற்க் கொள்ள பட்டுள்ளதாவும் செயலாளர் தெரிவித்ததையும் குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال