சாய்ந்தமருது அல்ஹிலாலில் இடமாற்றம் பெறும் அதிபரை வழியனுப்பி புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் அதிபரை வழியனுப்பி புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (05) பாடசாலை காலை ஆராதனையின் போது இடம்பெற்றது.
சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில் கடந்த 13 வருடங்களாக ஆசிரியராக, உதவி அதிபராக, பிரதி அதிபராக, பொறுப்பதிபராக செயற்பட்டு, சாய்ந்தமருது கமு/கமு/ அல்-கமரூன் வித்தியாலயத்திற்கு அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.எச். நுஸ்ரத் பேகம் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்வும் பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றி, புதிய அதிபராகப் பதவியேற்ற கே.எல். அப்துல் ஜௌபர் அவர்களை வரவேற்கும் நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார், பிரதி அதிபர்களான எம்.எச். லாபிர், ஏ.பி. ரோஷன் டிப்ராஸ், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத், முன்னாள் அதிபர் 'அதிபர் திலகம்' யூ.எல்.நசார், பாடசாலையின் ஒழுக்காற்றுக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.எஸ்.எஸ். ஷிப்லி உட்பட பாடசாலையின் பகுதித் தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு இருவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதன்போது இடமாற்றம் பெற்றுச் செல்லும் அதிபர் எம்.எச். நுஸ்ரத் பேகம் அவர்களைப் பாராட்டி புதிய அதிபர் கே.எல். அப்துல் ஜௌபர் உட்பட்ட குழாம் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டடதும் குறிப்பிடத்தக்கது.

No comments