Breaking News

பிரபா – ஹக்கீம் ஒப்பந்தம் பற்றிய நேர்மையற்ற விமர்சனம்.

இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரபா – ஹக்கீம் ஒப்பந்தம் பற்றி இப்போது சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் இது சரியா தவறா என்பதற்கப்பால் இதன் உண்மைகளை எவரும் நேர்மையாக வெளிப்படுத்துவதில்லை. 


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனியாக சென்று இந்த ஒப்பந்தத்தினை மேற்கொள்ளவில்லை. மாறாக கட்சி என்ற அடிப்படையில் ஒரு குழுவாக சென்று நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு ஒப்பந்தம் செய்துகொண்டனர்.


இந்த ஒப்பந்தத்தின் வரைபினை விடுதலை புலிகளின் சார்பில் அதன் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அப்போது செல்லமாக “”அன்டன் பாலசிங்கம்”” என்று அழைக்கப்பட்ட பசீர் சேகுதாவூதும் மேற்கொண்டிருந்தனர்.  


முஸ்லிம் காங்கிரசுக்கு தலைமைப் பதவியேற்று ஒரு வருடமும் பூர்த்தியாகாத நிலையில், வன்னிக்கு சென்ற தூதுக்குழுவினர் அனைவரையும் தாண்டி இந்த ஒப்பந்தத்தை ரவுப் ஹக்கீம் என்ற தனி நபரினால் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டது போன்று சித்தரிப்பதானது நேர்மையான விமர்சனம் அல்ல. 


பிரபா – ஹக்கீம் ஒப்பந்தத்தை பிழைகண்டு விமர்சிப்பவர்கள் அந்தந தூதுக்குழுவில் சென்ற அனைவரையும் விமர்சிக்காமல் தனியாக ரவுப் ஹக்கீம் என்ற ஒருவரை மாத்திரம் விமர்சிப்பதானது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும். 


புலிகளுடனான அன்றைய பேச்சுவார்த்தையில் வடகிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் ஏராளமான பிரச்சினைகள் பற்றி அலசி ஆராயப்பட்டது. அவ்வாறு புலிகளின் தலைவரை சந்தித்து பேசுவதானது அன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. 


ஆனால் ஒப்பந்தத்தில் “”வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள்”” என்ற வாசகம் மாத்திரம் சர்ச்சைக்குள்ளான விடயமாகும். இதுபற்றி வேறு ஒரு பதிவில் அலசி ஆராய்வோம். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments